» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐந்து ஓவர்கள் வீச நேரம் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் : கே.எல்.ராகுல் கருத்து

திங்கள் 20, நவம்பர் 2017 8:31:30 PM (IST)

இன்னும் ஐந்து ஓவர்கள் வீச நேரம் இருந்திருந்தால் எப்படியும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என துவக்க வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் போதிய வெளிச்சமி ன்மையால் ஆட்டம் ரத்தாகி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீச நேரம் இருந்திருந்தால், எப்படியும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் கூறுகையில், இப்படி ஒரு சுவாரஸ்யமான போட்டியை த்தான் ரசிகர்களுடன் நாங்களும் எதிர்பார்த்தோம். மழையால் இரண்டு நாட்கள் வீணான போதும், கடைசி நேரத்தில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது. இன்னும் 5 அல்லது 6 ஓவர்கள் வீசுவதற்கு நேரம் இருந்திருந்தால், கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua



Nalam Pasumaiyagam

New Shape Tailors


Universal Tiles Bazar


Johnson's Engineers




Thoothukudi Business Directory