» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பைக்கு இத்தாலி அணி தகுதி பெறாததால் வருத்தம்: கேப்டன் பப்போன் ஓய்வு

புதன் 15, நவம்பர் 2017 10:49:47 AM (IST)

 இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் சுவீடனிடம் தோல்வி கண்டு வாய்ப்பை இழந்ததால் இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இத்தாலியில் மிலன் நகரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் இத்தாலி அணி கோல் எதுவுமின்றி சுவீடனும் டிரா கண்டது. முதல் ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்று இருந்தால் உலக போட்டிக்கு முன்னேறியது. இத்தாலி அணி உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதால் இத்தாலி அணி வீரர்கள் மிகுந்த மனவேதனையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். 39 வயதான கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க உடனடியாக அறிவித்தார்.

உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான பப்போன், எதிரணியினரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் கில்லாடி. 1997-ம் ஆண்டில் ரஷியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இத்தாலி அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த பப்போன் அது முதல் 175 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1998, 2002, 2006, 2010, 2014-ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இத்தாலி அணியில் பப்போன் இடம் பெற்றார். 1998-ம் ஆண்டில் மட்டும் அவர் களம் இறங்கவில்லை. 2006-ம் ஆண்டில் இத்தாலி அணி உலக கோப்பையை வென்ற போது அந்த போட்டி தொடரில் அவர் மொத்தம் 2 கோல்களை மட்டுமே தடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக 175 சர்வதேச போட்டியில் ஆடி இருக்கும் பப்போன் 79 போட்டிகளில் இத்தாலி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய இத்தாலி வீரர் என்ற பெருமைக்குரிய பப்போன், உலக அளவில் அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

ஓய்வு குறித்து பப்போன் பேசுகையில், ‘இத்தாலி கால்பந்து உலகத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அதிகாரப்பூர்வமான கடைசி சர்வதேச போட்டியில் அணி வெற்றி பெறாமல் போனதையும், உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதையும் தலைகுனிவாக கருதுகிறேன். இந்த தோல்வியை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் பலிகடா ஆக்கக்கூடாது. கடந்த காலங்களிலும் நமது அணி தோல்வியில் இருந்து மீண்டு வலுவான நிலையை எட்டி இருக்கிறது. இத்தாலி அணியில் திறமையும், அர்ப்பணிப்பும் அதிகம் இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

பப்போனை தொடர்ந்து இத்தாலி அணியை சேர்ந்த ஆந்த்ரே பாராக்லி, டானிலே டி ரோஸ் ஆகிய வீரர்களும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி அணியின் மானேஜர் ஜியாம்பிரோ வென்டுரா கருத்து தெரிவிக்கையில், ‘நான் ராஜினாமா செய்யவில்லை. இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரிடம் பேசிய பிறகு தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய முடியும்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing
Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals
Thoothukudi Business Directory