» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு

சனி 11, நவம்பர் 2017 10:39:10 AM (IST)



இலங்கை அணியுடன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள இந்திய அணியில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவருக்கு ஓவளிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்வுக் குழுவினர், அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இலங்கை டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்க முடிவு செய்தனர். அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடுவதால் ஏற்படும் சுமையை தவிர்க்கவும், பெரிய அளவில் காயம் அடைவதில் இருந்து அவரை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அவர் தனது உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்ள பயிற்சி அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




Thoothukudi Business Directory