» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்காசிங் மரணம்

வெள்ளி 10, நவம்பர் 2017 7:08:02 PM (IST)

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்காசிங் மாரடைப்பால் திடீரென காலமானார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏ.ஜி. மில்கா சிங், (வயது 75). இவர் கடந்த 1941ல் சென்னையில் பிறந்தார். இந்திய அணிக்காக இவர் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 92 ரன்கள் எடுத்துள்ளார். 88 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள மில்கா சிங், 4324 ரன்கள் எடுத்துள்ளார். தனது 13வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய மில்கா சிங், தனது 17வது வயதில் மெட்ராஸ் அணிக்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் களமிறங்கினார். 

கடந்த 1904ல் அமிர்தசரஸில் இருந்து மில்காசிங் குடும்பத்தினர் வேலைக்காக சென்னைக்கு குடியேறினர். இவரது தந்தை ராம் சிங்கும் 56 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது சகோதரர் கிருபால், 14 டெஸ்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இன்று இவர் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals





Thoothukudi Business Directory