» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்?: விராட் கோலி கேள்வி!

புதன் 8, நவம்பர் 2017 4:22:21 PM (IST)



2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்தது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் பேசியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் 3-வது டி20 போட்டி முடிவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, பேசியதாவது: தோனியை ஏன் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எனப் புரியவில்லை. நான் மூன்றுமுறை தோல்வியடைந்தால் என்னை யாரும் விமரிசனம் செய்யமாட்டார்கள். ஏனெனில் நான் 35 வயதுக்கு மேல் இல்லை. தோனி நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். எல்லா சோதனைகளையும் கடக்கிறார். ஆடுகளத்தில் யோசனைகள் கூறுவது மூலமாகவும் அணிக்குப் பங்களிக்கிறார். 

ஒரு பேட்ஸ்மேனாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய சரியான கால அவகாசம் கிடைக்கவில்லை. எந்த நிலையில் ஆடவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியாவாலும் ரன் எடுக்கமுடியவில்லை. ஆனால் ஒருவரை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? ராஜ்கோட் டி20 போட்டியில் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். ஆனால் உங்கள் வசதிக்கு ஏற்றபடி ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இது நியாயமல்ல. 

தோனி அன்று விளையாடவந்தபோது ஒரு ஓவருக்கு 8.5-9.5 ரன்கள் தேவையாக இருந்தன. முதலில் விளையாடுபவர்களுக்கு எளிதாக இருந்த ஆடுகளம் பின்னால் வந்தவர்களுக்குக் கடினமாக இருந்தது. பிற்பாதியில் ஆடுகளத்தின் தன்மை மிகவும் மாறியிருந்தது. இவை அனைத்தையும் அலசிப் பார்க்கவேண்டும். அணி நிர்வாகத்தினர், எந்தச் சூழலில் ஒரு பேட்ஸ்மேன் ஆடச்சென்றார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாங்கள் உணர்ச்சிவசப்படுவதில்லை. மற்றவர்களின் கருத்துகளில் ஆர்வம் செலுத்துவதில்லை. 

தோனி நன்றாகத்தான் விளையாடிவருகிறார். தன்னுடைய ஆட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த கடுமையாக முயற்சிகள் செய்கிறார். அவருடைய பொறுப்புகளையும் உணர்ந்துள்ளார். ஆனால் எல்லா நேரங்களிலும் ரன்கள் குவிக்கமுடியாது. தில்லி அவர் அடித்த சிக்ஸர், ஆட்டத்துக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஐந்துமுறை காண்பிக்கப்பட்டது. ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. உடனே அவரை விமரிசனம் செய்கிறோம்  தோனி விவரமானவர். தன்னுடைய திறமை, உடற்தகுதி ஆகியவற்றை நன்கு அறிந்தவர். வேறு யாரும் அது குறித்து முடிவெடுக்க வேண்டியதில்லை என்று தோனிக்குத் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் கோலி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

New Shape Tailors

selvam aqua





Thoothukudi Business Directory