» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்..!

வெள்ளி 19, மே 2017 5:17:49 PM (IST)

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்  சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்க உள்ளது.நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த மனிஷ் பாண்டே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது காயமடைந்தார். 

இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம் பெற்றிருந்த அவருக்கு பதிலாக தமிழகத்தைச்  சேர்ந்த   தினேஷ் கார்த்திக்குக்கு தன்னை மீண்டும் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் நீண்டகாலமாக மீண்டும் இந்திய அணியில் நுழைய வாய்ப்பு தேடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.

2004-ல் அறிமுகமான தினேஷ் கார்த்திக், 71 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார், இதில் 24 போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். மொத்தம் 1313 ரன்களை 27.93 என்ற சராசரி அளவில் அவர் எடுத்துள்ளார். 2014-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரே இவர் கடைசியாக ஆடிய சர்வதேச போட்டியாகும்.

சமீப காலங்களில் தினேஷ் தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்ட போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ரஞ்சி டிராபி 2016-17 சீசனில் ஒரு சதம் 5 அரைசதங்களுடன் மொத்தம் 704 ரன்களை  54.15 என்ற சராசரியில் தினேஷ் கார்த்திக் எடுத்துள்ளார். மேலும் தற்போதைய ஐபிஎல்-10 தொடரில், குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் 361 ரன்களை குவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மும்பை அணியை வீழ்த்தியது ராயல்ஸ்

திங்கள் 23, ஏப்ரல் 2018 9:05:15 AM (IST)

Sponsored Ads

crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD




Johnson's Engineers




Thoothukudi Business Directory