» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி - சுந்தர் அபாரம் : மும்பையை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது புணே!!

புதன் 17, மே 2017 9:09:42 AM (IST)



தோனியில் அதிரடி பேட்டிங் மற்றும் சுந்தரின் அபார பந்து வீச்சால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புணே இறுதிபோட்டிக்கு முன்னேறியது 

இந்த இரு அணிகளுக்கு இடையே நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 43 பந்துகளைச் சந்தித்த ரஹானே 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து கரன் சர்மா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.  45 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கண்டார் மனோஜ் திவாரி. தோனி 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் மெக்லனாகன், மலிங்கா, கரன் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 163 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட மும்பை அணியில் பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 40 பந்துகளுக்கு 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எஞ்சிய வீரர்களில் ஹர்திக் பாண்டியா 14, கிருனால் பாண்டியா 15, மெக்லனாகன் 12 ரன்களில் வெளியேறினர். கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வீழ்ந்தது மும்பை. புணே தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உனட்கட்,ஃபெர்குசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Black Forest Cakes



Johnson's Engineers

Panchai Dairy

selvam aqua

New Shape Tailors



Nalam Pasumaiyagam


CSC Computer Education




Thoothukudi Business Directory