» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் முக்கிய வீரராக ரிஷப் பந்த் திகழ்வார்: ராகுல் டிராவிட் பாராட்டு

ஞாயிறு 14, மே 2017 12:29:07 PM (IST)



வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக ரிஷப் பந்த் திகழ்வார் என ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 10-வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய 19 வயதான இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் ரிஷப் பந்த் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று டெல்லி டேர்டெல் வில்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ரிஷப் பந்த், இந்த ஆண்டு சிறப்பாக விளையாடினார். இந்த தொடரில் அவர் கடினமான சூழ்நிலையிலேயே களமிறங்கினார். தந்தையை இழந்த நிலையில், மனதை திடப்படுத்திக் கொண்டு அவர் சிறப்பாக பேட் செய்தார். சோகத்தை வென்ற அவர் இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். வருங்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக ரிஷப் பந்த் நிச்சயம் திகழ்வார். இந்த சீசனில் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம்தான்.

தொடரை சிறப்பாக தொடங்கிய நாங்கள் ஒரு சில ஆட்டங்களில் நெருங்கிச் சென்றும் தோல்வியடைந்தோம். மேலும் தொடரின் நடுப்பகுதியில் வெற்றிகளை சேர்க்க தவறினோம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த சீசனில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாங்கள், இந்த சீசனில் 6-ல் வெற்றி பெற்றோம். கடைசி வரை நெருங்கிச் சென்று தோல்வியடைந்த ஆட்டங்களால் தான் இம்முறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டோம் என கருதுகிறேன்.

துரதிருஷ்டவசமாக இந்த சீசனை தொடங்கும் முன்னதாகவே அனுபவம் வாய்ந்த வீரர்களான குயிண்டன் டி காக், டுமினி ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர். கடைசி நேரத்தில் இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏராளமான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. 

அப்போதே அணியின் சமநிலையை இழந்துவிட்டோம். பேட்டிங்கில் இளம் இந்திய வீரர்களை கொண்டிருந்ததால், அனுபவம் வாய்ந்த பந்து வீச்சுடன் களமிறங்க முடிவு செய்தோம். இளம் வீரர்களிடம் திறன் அதிக அளவில் உள்ளது. ஆனால் வெற்றி பெற வேண்டுமானால் அணி சமநிலையுடன் அமைய வேண்டும். மேலும் அதிர்ஷ்டமும் எங்களுக்கு கைகொடுக்கவில்லை. தவறான நேரத்தில் வீரர்கள் காயம் அடைந்தனர். ஒரு சில வீரர்கள் நாங்கள் விரும்பியவாறு திறனை வெளிப்படுத்த வில்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மும்பை அணியை வீழ்த்தியது ராயல்ஸ்

திங்கள் 23, ஏப்ரல் 2018 9:05:15 AM (IST)

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD






crescentopticals




Johnson's Engineers



Thoothukudi Business Directory