» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது ஐதராபாத்

சனி 13, மே 2017 8:15:39 PM (IST)




குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த 53வது ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத், ஐதராபாத் அணிகள் மோதுதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு, டுவைன் ஸ்மித், இஷான் கிஷான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. ஐதராபாத் பந்துவீச்சை சர்வசாதாரணமாக சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது, ஸ்மித் (54) அரைசதம் அடித்து அவுட்டானார்.

பின் வந்த கேப்டன் ரெய்னா (2) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இஷான் கிஷான், 61 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (0), பின்ச் (2), பால்க்னர் (8) சங்வான் (0), சோனி (0) என நிலைக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் கடைசி வரை ரவிந்திர ஜடேஜா போராட, குஜராத் அணி, 19.2 ஓவரில் 154 ரன்களுக்கு 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பின்னர் எட்டக்கூடிய இலக்கை சேஸ் செய்த ஐதராபாத் அணிக்கு, துவக்க வீரர் தவான் (18) ஏமாற்றினார். 

அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் (4) சொதப்பலாக வெளியேற, பின் வந்த சங்கர், கேப்டன் வார்னருக்கு தோள் கொடுத்தார்.இருவரும் குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்க, ஐதராபாத் அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறினர். பவுண்டரிகளாக வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதையடுத்து 18.1 ஓவரில், ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.இதனால் குஜராத் அணி தோல்வியுடன் வெளியேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here

Johnson's Engineers

selvam aqua

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education





Black Forest Cakes


New Shape Tailors



Thoothukudi Business Directory