» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிரடியாக மைதானத்துக்குள் புகுந்து ரெய்னாவிடம் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்

வியாழன் 11, மே 2017 7:54:50 PM (IST)



டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் போது, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் தொடரில் கான்பூரில் நடந்த 50லீக் போட்டியில், குஜராத், டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணியின் ஸ்ரேயாஷ் ஐயர், 96 ரன்கள் விளாச, டெல்லி அணி, குஜராத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியின் நடுவே, குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் வேகமாக ஓடி வந்தார். 

நேராக ரெய்னாவிடம் சென்ற இவர், அவரிடம் தனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டுத்தரும்படி மைதானத்தின் நடுவிலேயே மண்டியிட்டு கெஞ்சினார்.அதற்குள் அம்பயர், மைதான பணியாளர்கள் ஆகியோர் இவரை நோக்கி விரைந்துவர, உடனடியாக அவர் வெளியேறினார். ஆனால் அவர் ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு ஆட்டோகிராப் கடைசி வரை கிடைக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD






Johnson's Engineers

crescentopticals





Thoothukudi Business Directory