» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி பேட்டிங்.. டெல்லிக்கு 5-வது வெற்றி - குஜராத் அணிக்கு 9-ஆவது தோல்வி

வியாழன் 11, மே 2017 12:53:21 PM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.
அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில் கார்த்திக்-ஃபிஞ்ச் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. ஆரோன் ஃபிஞ்ச். 39 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்து சமி பந்துவீச்சில் போல்டு ஆனார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது குஜராத். டெல்லி தரப்பில் முகமது சமி, பட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய டெல்லி அணியில் சாம்சன் 10 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ரிஷப் பந்த் பவுண்டரி அடித்த கையோடு, எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இதையடுத்து கருண் நாயருடன் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இதனால் 7 ஓவர்களில் 71 ரன்களை எட்டியது டெல்லி. அதிரடியாக ஆடிய ஷ்ரேயஸ், 33 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு ஆண்டர்சன் 6, பிரத்வெயிட் 11 ரன்களில் வெளியேற, பேட் கம்மின்ஸ் களம்புகுந்தார். அப்போது டெல்லியின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்டன. ஃபாக்னர் வீசிய 17-ஆவது ஓவரில் கம்மின்ஸ் சிக்ஸரை விளாச, அதே ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். இதனால் அந்த ஓவரில் 21 ரன்கள் கிடைக்க, டெல்லியின் வெற்றி எளிதானது. 

19-வது ஓவரில் கம்மின்ஸ் 24 ரன்களில் (13 பந்துகள்) ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பாசில் தம்பி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 57 பந்துகளில் 96 ரன்கள் குவித்த ஐயர், சதத்தை நழுவவிட்ட ஏமாற்றத்தோடு வெளியேறினார். இதையடுத்து வந்த அமித் மிஸ்ரா, தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்ட, 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து வெற்றி கண்டது டெல்லி. குஜராத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 2 விக்கெட் வீழ்த்தினார். ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 5-வது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here


Universal Tiles Bazar

Black Forest Cakes

New Shape Tailors

selvam aqua



Nalam Pasumaiyagam

Johnson's Engineers



CSC Computer Education



Thoothukudi Business Directory