» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆம்லா சதம் வீண்... பஞ்சாபை பந்தாடியது குஜராத் ..!!
திங்கள் 8, மே 2017 12:50:15 PM (IST)

ஐ.பி.எல்., லீக் போட்டியில், டுவைன் ஸ்மித் அரைசதம் கடந்து கைகொடுக்க, குஜராத் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் வீரர் ஆம்லா சதம் வீணானது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா, பீல்டிங் தேர்வு செய்தார். பொறுப்பாக ஆடிய ஷான் மார்ஷ், 37 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். ஆம்லா 104 ரன்கள் எடுத்து இந்த சீசனில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. கேப்டன் மேக்ஸ்வெல் (20), அக்சர் படேல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின்ன ஆடிய, குஜராத் அணிக்கு இஷான் கிஷான் (29) நல்ல துவக்கம் தந்தார். டுவைன் ஸ்மித் 74 ரன்களும், கேப்டன் ரெய்னா 39 ரன்களும் எடுத்தனர். ஆரோன் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் தினேஷ் கார்த்திக். பின் கடைசி ஓவரில் நடராஜன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (35), ஜடேஜா (7) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வியை பெற்ற பஞ்சாப் அணியின் பிளே–ஆப் வாய்ப்பு இழுபறியானது.
ரெய்னா புதிய சாதனை
குஜராத் அணி கேப்டன் ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் 4500 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 159 போட்டியில் ஒரு சதம், 31 அரைசதம் உட்பட 4532 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி (4360 ரன்), கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் (4059) உள்ளனர்.
ஐ.பி.எல்., வரலாற்றில் 47வது சதம்
பஞ்சாப் அணியின் ஆம்லா (104), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதமடித்தார். முன்னதாக இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 104* ரன்கள் எடுத்திருந்தார். இது, இம்முறை பதிவான 5வது சதம். இதற்கு முன், டில்லியின் சஞ்சு சாம்சன் (102, எதிர்–புனே), ஐதராபாத்தின் வார்னர் (126, எதிர்–கோல்கட்டா), புனேயின் பென் ஸ்டோக்ஸ் (103*, எதிர்–குஜராத்) ஆகியோர் சதமடித்திருந்தனர். ஒட்டுமொத்த ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவான 47வது சதம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 7:57:32 PM (IST)

ஐபிஎல் : ராகுல்,கெயில் அதிரடி ஆட்டம், கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
சனி 21, ஏப்ரல் 2018 8:36:20 PM (IST)

நான் யார் என்பதை ரஷீத் கானுக்குத் காட்ட முயன்றேன் : அதிரடி குறித்து கிறிஸ் கெய்ல் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 4:22:47 PM (IST)

வாட்சன் அதிரடி சதம்: ராஜஸ்தானை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!
சனி 21, ஏப்ரல் 2018 11:19:53 AM (IST)

கிறிஸ் கெய்ல் ஆட்டம் சூடுபிடித்தால் எதிரணியால் ஒன்றும் செய்ய முடியாது : அஸ்வின் புகழாரம்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 10:48:47 AM (IST)

உங்கள் அன்புக்கு நானடிமை நீங்க வேற லெவல் மாஸ்யா : ஹர்பஜன்சிங் ட்விட்டர் பதிவு
வியாழன் 19, ஏப்ரல் 2018 8:34:13 PM (IST)
