» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிவேக அரைசதம் .. சுனில்நரேன் புதிய சாதனை: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா அணி

திங்கள் 8, மே 2017 11:28:59 AM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த கொல்கத்தா வீரர் சுனில் நரேன் புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர், பெங்களூரு அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். கடந்த சில போட்டிகளில் நடந்தது போலவே இந்த போட்டியிலும் பெங்களூரு அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சொதப்பினர். 

கெயில் 0, கோலி 5, டிவில்லியர்ஸ் 10 ரன்களில் அவுட் ஆக ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என்று பெங்களூரு அணி தடுமாறியது. இந்த இக்கட்டில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் மன்தீப் சிங், டிராவிஸ் ஹெட் ஆகி யோர் ஈடுபட்டனர். இதனால்  பெங்களூரு அணி 14.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மன்தீப் சிங் 52 ரன்களில் அவுட் ஆனார். மன்தீப் சிங் - ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்களைச் சேர்த்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களைச் சேர்த்தது.

வெற்றிபெற 159 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த கொல்கத்தா அணி அதிரடி காட்டியது. காயத்தால் கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் லின், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக விரட்டினார். மறுபுறத்தில் அவரைவிட வேகமாக பேட்டை சுழலவிட்டார் சுனில் நரேன். பத்ரி வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்ட சுனில் நரேன், அதே வேகத்தில் 15 பந்துகளிலேயே அரைசதத்தை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்தார்.

நரேன் - லின் ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி 6 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது. ஐபிஎல்லில் சாதனை படைத்த இந்த தொடக்க ஜோடியை சவுத்ரி பிரித்தார். 17 பந்துகளில் 54 ரன்களை விளாசிய சுனில் நரேன், சவுத்ரியின் பந்தில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து லின்னும் (22 பந்தில் 50 ரன்கள்) அவுட் ஆக கொல்கத்தாவின் ரன் குவிக்கும் வேகம் சற்று குறைந்தது. இருப்பினும் 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 159 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Johnson's Engineers




Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


CSC Computer Education

Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory