» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிம்மன்ஸ், பொலார்ட் அபாரம் : டெல்லிக்கு எதிராக அசத்தல் வெற்றி பெற்றது மும்பை

ஞாயிறு 7, மே 2017 12:57:53 PM (IST)ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 45-ஆவது லீக் ஆட்டத்தில் 146 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை மும்பை இண்டியன்ஸ் தோற்கடித்தது .

டில்லியில் நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் லென்டில் சிம்மன்ஸும், பார்த்திவ் படேலும் ஆரம்பத்தில் நிதானம் காட்டினர்.ரபாடா வீசிய 4-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய சிம்மன்ஸ், பின்னர் டெல்லி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் 8 ஓவர்களில் 76 ரன்களை எட்டியது மும்பை. 

அந்த அணி 8.4 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்திருந்தபோது படேலின் விக்கெட்டை இழந்தது. அவர் 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த பொலார்ட் ஹர்திக் பாண்டியா ஜோடி டெல்லி பந்து வீச்சை நாெறுக்கினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. போலார்ட் 35 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63, பாண்டியா 14 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.டெல்லி தரப்பில் ரபாடா, மிஸ்ரா, ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 59 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் ஆடிய டெல்லி அணியில் முதல் பந்திலேயே சாம்சன் அவுட்டானார். குஜராத் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய பண்ட் இந்த முறை டக் அவுட்டானார். தொடர்ந்து மும்பையின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 13.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு டெல்லி அணி சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 21 ரன்களும், ஆண்டர்சன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 10 ரன்களும் எடுத்தனர். எஞ்சிய அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிம்மன்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் இன்றைய ஆட்டங்கள் 

இன்று ஐபிஎல் தொடரில் 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களுரூ அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.இரவு 8 மணிக்கு  நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.இதில் பெங்களூரு, குஜராத் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


selvam aqua

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

Johnson's Engineers

New Shape Tailors
Black Forest Cakes

Pop Up HereThoothukudi Business Directory