» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உனக்தத் ஹாட்ரிக் : ஹைதராபாதை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது புனே

சனி 6, மே 2017 8:37:43 PM (IST)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்  லீக் போட்டியில், புனே அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்தில் நடந்த 44வது லீக் போட்டியில், ஐதராபாத், புனே அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு, ரகானே, ஸ்மித் (34), ஸ்டோக்ஸ் (39) தோனி (31) ஆகியோர் கைகொடுக்க புனே அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.ஐதராபாத் அணி சார்பில் காவுல் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் வார்னர் (40), யுவராஜ் சிங் (47) , தவான் (19) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது .

உனக்தத் ஹாட்ரிக்:

ஐதராபாத் அணி, வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பிபுல் சர்மா (8) அவுட்டானார். அடுத்த பந்தில் ரசித் கான் (3) வெளியேறினார். ஹாட்ரிக் பாலை எதிர்கொண்ட புவனேஷ்வர் (0) சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டானார்.அடுத்த இரண்டு பந்தில் ஒருரன் கூட எடுக்கவில்லை. இதனால், கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் ஹாட்ரிக் விக்கெட் உடன் புனே அணிக்கு உனக்தத் வெற்றி தேடித்தந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

selvam aqua

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers

CSC Computer Education





Thoothukudi Business Directory