» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் : வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

சனி 6, மே 2017 7:24:02 PM (IST)

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-0 என நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

மலேசியாவின் இபோ நகரில்,  சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் லீக் முறையில் மோதின. இதன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

இதன் முதல் பாதியில், இந்தியாவின் ரூபேந்த சிங் (2, 10வது நிமிடம்) இரண்டு கோல் அடித்த, இதற்கு நியூசிலாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து இந்திய அணி முதல் பாதியின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுனில் (48), தல்விந்தர் சிங் என இரட்டை அடிகொடுக்க, நியூசிலாந்து வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என நியூசிலாந்து அணியை வீழ்த்தி, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers

New Shape Tailors


Pop Up Here

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


selvam aqua

CSC Computer Education



Thoothukudi Business Directory