» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிக சிக்சர்கள் அடிக்க முயற்சிப்பீர்களா ? தோனியிடம் யுவராஜ் கேள்வி

புதன் 11, ஜனவரி 2017 1:39:12 PM (IST)

இந்திய கேப்டன் தோனியின் கடைசி போட்டிக்கு பின் யுவராஜ் சிங், அவரிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.இவர், தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக சமீபத்தில் ஒருநாள், டி-20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் கேப்டனாக களமிறங்கிய தோனி, தோல்வியுடன் பதவிக்கு முழுக்கு போட்டார். இந்த போட்டிக்கு பின் தோனியிடம், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாலியாக பேட்டி எடுத்தார். அதில் தோனியிடம் இனி அதிக சிக்சர்கள் அடிக்க முயற்சிப்பீர்களா என கேட்டார்.அதற்கு தோனி, எனக்கு தோதான லைனில் பவுலர் பந்துவீசும் பட்சத்தில் அதை அனைத்தையும் சிக்சருக்கு அனுப்ப முயற்சிப்பேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education


selvam aqua

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

Johnson's Engineers


Black Forest Cakes

Pop Up Here





Thoothukudi Business Directory