» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இனி ஆக்ரோஷமான தோனியை காணலாம் : யுவராஜ் சிங்

திங்கள் 9, ஜனவரி 2017 7:13:46 PM (IST)

இனி பயமில்லாத ஆக்ரோஷமான தோனியை காணலாம் என அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார் தோனி.இந்நிலையில் நாளை நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோனி கடைசியாக கேப்டன் பொறுப்பில் களமிறங்கவுள்ளார். 

இதில் யுவராஜ் சிங்கும் சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பங்கேற்கிறார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் போது:தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது சரியான முடிவு. அவர் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லாத காரணத்தினால் அவரது பயமில்லாத ஆக்ரோஷமான ஆட்டத்தை காண முடியும். நானும் எனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Johnson's Engineers



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory