» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிசிசிஐ தலைவர் பதவி: கங்குலி திட்டவட்டமாக மறுப்பு

புதன் 4, ஜனவரி 2017 5:02:56 PM (IST)

பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை கங்குலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட புகார் எதிரொலியால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக, உச்சநீதிமன்றத்தால் லோதா கமிட்டி நியமிக்கப்பட்டது. ஆனால் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க கூடாது என்பது உள்ளிட்ட அந்த கமிட்டி வழங்கிய சீர்திருத்த பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐ தொடர்ச்சியாக மறுத்து வந்தது. 

இதனால் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு, நேற்று முன் தினம் அதிரடியாக நீக்கியது. இந்நிலையில் தற்போதைய பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரங் கங்குலி, புதிய பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கலாம் என தகவல்கள் வெளியானது. 

கேப்டன் பணியில் சிறப்பாக செயல்பட்டவர் என்பதால், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்களும் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த தகவலை கங்குலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில், இந்த விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமலும், முன் கூட்டியேவும் அடிபட்டு விட்டது. அந்த பொறுப்பிற்கான தகுதி எனக்கு இல்லை. சிஏபி தலைவராக ஒரு ஆண்டுதான் பதவி வகித்துள்ளேன். அந்த பதவியில் எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. 

பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியில் நான் ஓடவில்லை என்றார். ஜக்மோகன் டால்மியா மறைவுக்கு பின், கடந்த 2015ம் ஆண்டில்தான் கங்குலி சிஏபி தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. லோதா கமிட்டி பரிந்துரைகளை சிஏபி அமல்படுத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, நிர்வாகிகள் கூட்டம் புதன் கிழமை (இன்று) நடைபெறுகிறது. எதிர்காலம் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிப்போம் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






crescentopticals

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors





Thoothukudi Business Directory