» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்ட்.. பாக். இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

வெள்ளி 30, டிசம்பர் 2016 4:20:13 PM (IST)



மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்றுள்ளது. 

மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்டில் 39 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி 26ம் தேத தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடத்தப்படும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பாக்சிங் டே டெஸ்ட் எனவும் பெயர் உண்டு. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அசார் அலி இரட்டைச் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் டிக்ளேர் செய்தது.  5-ம் நாளான இன்று 465/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 142 ஓவர்களில் ஓவருக்கு 4.39 என்ற ரன்விகிதத்தில் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 624 ரன்கள் குவித்தது, கேப்டன் ஸ்மித் 13 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 165 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, மிட்செல் ஸ்டார்க் 91 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களை விளாசித்தள்ளினார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 154 அதிரடி ரன்களைச் சேர்த்தனர். 

இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆட களமிறங்கிய பாகிஸ்தான் 53.2 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்களில் தோல்வி தழுவி தொடரை இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மீண்டும் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். அசார் அலி இரட்டைச் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த பாகிஸ்தான் அணி சுமார் 141 ஓவர்கள் மழையால் விரயமான டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors

Black Forest Cakes

selvam aqua

Pop Up Here

Universal Tiles Bazar





CSC Computer Education

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory