» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
ஆர்.டி.ஓ. அலுவலக சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 12, ஏப்ரல் 2022 4:53:26 PM (IST)

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.4.2022) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில், பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாக பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத (Contactless Service) போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பழகுநர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத் தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப் படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் அப்டேட் ஆகிவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?
புதன் 26, நவம்பர் 2025 4:23:16 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 3:43:46 PM (IST)

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்: ஆயத்த பணிகள் விரைவில் தொடக்கம்!
புதன் 11, செப்டம்பர் 2024 10:49:54 AM (IST)

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொது சேவை மையம்
புதன் 29, மே 2024 4:19:45 PM (IST)

நத்தம் பட்டா மாறுதல் திட்டம் : ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 8, மார்ச் 2024 5:19:17 PM (IST)

தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி
வியாழன் 8, ஜூன் 2023 12:48:27 PM (IST)











TamilanApr 12, 2022 - 06:19:37 PM | Posted IP 173.2*****