» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடியில் வெளியே சுற்றும் கரோனா நோயாளிகள் : பொதுமக்கள் அச்சம்

வியாழன் 23, ஜூலை 2020 12:55:43 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வெளியே வந்து செல்வதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனை செல்லவே அச்சப்படுகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சுமார் கடந்த 10 தினங்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் நான்கு பேர் பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள டீ கடைக்கு வந்து டீ அருந்திய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது. 

இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்ததும் உடனடியாக அப் பகுதி டீக்கடைகளுக்கு சென்று கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்து வமனையை விட்டு வெளியே வருவதாகவும் அதனால் டீக்கடைகள் முன்பு 1 மீட்டர் முன்னதாகவே கயிறுகளை கட்டுமாறு அறிவுறுத்திச் சென்றனர். 

இது ஒரு புறமிருக்க அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்க தனி வார்டு உள்ளது. ஆனால் அங்கு சிகிச்சை பெறுவோர் சர்வ சாதாரணமாக அங்குள்ள பிற வார்டுகளுக்கும், வெளியிலும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பிற நோய் பாதிப்புகளுக்காக அரசு மருத்துவமனை சென்று வருவோர், மருந்து,மாத்திரைகள் வாங்க வருவோர் அச்சமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவர்களால் நோய் பரவாமல் இருக்கவே அவர்களை தனிமைப்படுத்துகின்றனர். 

ஆனால் அவர்கள் சாதாரணமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆரம்பத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு வேளா வேளைக்கு சரியாக உணவு,டீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது அதிக எண்ணிக்கையில் கரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்றுவருவதால் அவர்களுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் கரோனா பாதித்தவர்களே நேரடியாக வெளியே வரும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி கரோனா பாதித்தவர்கள் வெளியே செல்வதை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

KumarJul 23, 2020 - 03:46:52 PM | Posted IP 108.1*****

True, no proper control. Doctors and nurses not even enter into the Corona Ward...

RamaJul 23, 2020 - 03:30:23 PM | Posted IP 173.2*****

Corona patients coming out is not fair, I agree on that. Same time, why don't you also cover and expose what is happening inside corona ward? How corona patients are being treated in corona ward? How many times doctors visit them in a day? How are they attended to their basic needs like food & water? There are nurses who dont even step into corona ward (even with PPE kits), while taking attendance, they use to stand far away from the ward and shout the names. Security person use to show sticks and utter bad words at corona patients even when they step out to the main ward for swab test schedules!! To summarise, corona patients are extremely discriminated and ill-treated to the core in GH

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory