» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
மகாமாரியை கட்டுப்படுத்த ஆலயங்கள் திறக்கப்படுமா ? ஆன்மிக பெரியாேர்கள் அரசுக்கு கோரிக்கை
வெள்ளி 10, ஜூலை 2020 11:07:59 AM (IST)

இந்தியா முழுவதும் கடந்த 100 நாள்களுக்கு மேலாக அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூடி வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் உடனே ஆலயங்களை திறக்க வேண்டும் என ஆன்மிக பெரியோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ம் தேதி முதலே கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவை பூட்டப்பட்டுள்ளது. இதில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. ஆனால் 100 நாள்களுக்கு மேலாக அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூடி வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் இதனால் கெட்ட நிகழ்வுகள் தலைதூக்க வாய்ப்புள்ளதாக ஆன்மிக பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்களை மாற்றவும், எதிர்மறை எண்ணங்களை அழிக்கவுமே வழிபாட்டு தலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 100 நாள்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்களை மூடி வைத்திருப்பது கடந்த 100 வருடங்களில் நடக்காத நிகழ்வாகும். இப்படி மூடி வைத்தால் நாட்டில் விரும்பதகாத நிகழ்வுகள், மக்களிடம் ஒரு வித அச்சம், விரக்தி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கரோனா வைரஸ் குறித்து பேசும் போது அதை மகாமாரி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆங்கில மருந்துகள் சரிவர பயன் தராத நிலையில் நம் நாட்டிலுள்ள வேப்பிலை, மஞ்சள் நீர் தெளித்தல், சித்த மருத்துவம், ஹோமியோபதி பக்கம் அனைவரும் பார்வையும் திரும்பியுள்ளது. மீண்டும் நம் பாரம்பரியத்திற்கே பொதுமக்கள் திரும்ப துவங்கியுள்ளனர்.

பக்தர்களுக்கு உதவவும் அவர்களை கண்காணிக்கவும் கோவில்களில் தன்னார்வலர் குழுக்கள் ஏற்படுத்தி அவற்றை காவல்துறை மேற்பார்வை செய்யலாம். பொதுவாகவே வழிபாட்டின் போது கூறப்படும் மந்திரங்கள், பூஜைகள், கோவில்கள், சர்ச்சுகளில் ஒலிக்கப்படும் மணி சத்தம், மசூதிகளின் துஆ சப்தத்திற்கு சுற்றுப்புறத்திலுள்ள எதிர்மறை அதிர்வலைகளை நீக்கி, கெட்ட சக்திகளை அகற்றும் சக்தி உள்ளது. இதற்காக தான் நமது முன்னோர்கள் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆலயங்கள் மூடப்பட்டுள்ளதால் வழிபாடுகள் மட்டுமின்றி அன்னதானம் வழங்குவதும் தடைபட்டுள்ளது. மன்னராட்சி காலத்தில் நாட்டுக்கு இது போன்று ஆபத்துகள் வந்தால் அரசர்கள், அங்குள்ள ஆன்மிக பெரியோர்கள், முனிவர்கள், மதகுருமார்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்பார்கள். அது போல் தற்போதும் மத்திய மாநில அரசுகள் மத குருமார்களிடம் இது குறித்து கலந்தாலோசிக்கலாம். நாட்டுக்கு ஏதாவது பெரிய ஆபத்துகள் நிகழ்வதற்கு முன் வழிபாட்டு தலங்களை உடனே திறக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1607430322.jpg)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு : விவிடி மேம்பாலம் பணிகளை துவக்க மக்கள் கோரிக்கை!
செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)

இ பாஸ் விவகாரம் : தமிழக முதல்வருக்கு அதிமுக.,வினரே எதிர்ப்பு !
சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

தூத்துக்குடியில் வெளியே சுற்றும் கரோனா நோயாளிகள் : பொதுமக்கள் அச்சம்
வியாழன் 23, ஜூலை 2020 12:55:43 PM (IST)

சாத்தான்குளத்திற்கு பழைய பெயரையே சூட்ட வேண்டும் : அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
வியாழன் 9, ஜூலை 2020 12:24:07 PM (IST)

ஜாதி வாட்ஸ்ஆப் குழுக்கள் வைத்திருந்தால் சஸ்பெண்ட் : போலீசாருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
செவ்வாய் 7, ஜூலை 2020 11:06:56 AM (IST)

தனிபிரிவு ஏட்டு பணியிட மாற்றம்... சமுக விரோதிகள் கொண்டாட்டம்... பொதுமக்கள் வருத்தம்!!
வியாழன் 11, ஜூன் 2020 12:43:40 PM (IST)
