» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
ஜாதி வாட்ஸ்ஆப் குழுக்கள் வைத்திருந்தால் சஸ்பெண்ட் : போலீசாருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
செவ்வாய் 7, ஜூலை 2020 11:06:56 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் உடனே சஸ்பெண்ட் செய்யபடுவார்கள் என மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இதனால் மறுபடியும் ஜாதி கலவரம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. இது குறித்து நமது டூட்டி ஆன்லைன் இணையதளத்தில் கடந்த ஜூன் 25 ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் வாட்ஸ்ஆப்பில் ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுவது தெரிய வந்தால் 3 நாட்களுக்குள் அது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட காவலர் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார் அல்லது ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என எஸ்பி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வருவோர், விசாரணைக்கு அழைத்து வருவோரிடம் காவல்துறை அதிகாரிகள் ஜாதிய பாகுபாடு காட்ட கூடாது. ஒரு ஜாதிக்கு ஆதரவாகவும் மற்றொருவருக்கு எதிராகவும் செயல்பட கூடாது. காவல்துறையில் பணியாற்றும் நாம் அனைவரும், அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தின் பெயர்,மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் பெயர் மற்றும் அவரது செல்போன் எண், அந்த பகுதி டிஎஸ்பியின் பெயர் மற்றும் செல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி.,யின் இந்த நடவடிக்கைகக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறை மீது பாெதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க இது போல் மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எஸ்பி., எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1607430322.jpg)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு : விவிடி மேம்பாலம் பணிகளை துவக்க மக்கள் கோரிக்கை!
செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)

இ பாஸ் விவகாரம் : தமிழக முதல்வருக்கு அதிமுக.,வினரே எதிர்ப்பு !
சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

தூத்துக்குடியில் வெளியே சுற்றும் கரோனா நோயாளிகள் : பொதுமக்கள் அச்சம்
வியாழன் 23, ஜூலை 2020 12:55:43 PM (IST)

மகாமாரியை கட்டுப்படுத்த ஆலயங்கள் திறக்கப்படுமா ? ஆன்மிக பெரியாேர்கள் அரசுக்கு கோரிக்கை
வெள்ளி 10, ஜூலை 2020 11:07:59 AM (IST)

சாத்தான்குளத்திற்கு பழைய பெயரையே சூட்ட வேண்டும் : அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
வியாழன் 9, ஜூலை 2020 12:24:07 PM (IST)

தனிபிரிவு ஏட்டு பணியிட மாற்றம்... சமுக விரோதிகள் கொண்டாட்டம்... பொதுமக்கள் வருத்தம்!!
வியாழன் 11, ஜூன் 2020 12:43:40 PM (IST)

PANDIJul 7, 2020 - 04:30:19 PM | Posted IP 108.1*****