» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் தனியார் நிறுவனம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

வெள்ளி 11, அக்டோபர் 2019 11:59:51 AM (IST)வல்லநாடு அருகே வனவிலங்கு  சரணாலயம் மற்றும் விவசாய விளைநிலங்கள் பாதிக்கின்ற வகையில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன்  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியரிடம் அளிக்ககப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கிழவல்லநாடு ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தெய்வச்செயல்புரம், கிருஷ்ணாபுரம், இராமநாதபுரம், செட்டிமல்லன்பட்டி, பிரமியார்குளம், திருவேங்கடபுரம், வடக்குகாரசேரி, முருகன்புரம், சிலோன்காலனி, புளியங்குளம், ஈச்சந்தா ஓடை, விளாத்திகுளம், கோனார்குளம் ஆகிய கிராமங்களில் பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்களில் காய்கறிகள்,நெல், வாழை, பூவகைகளை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள். விளைநிலங்களுக்கு தேவையான நீர் தேவைகளை நிலத்தடி நீர் மூலமாகவே பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு கால்நடை வளர்ப்பு தொழில்கள் அதிகமாக உள்ளன. கடந்த 2015 ஆண்டு ஜூலை மாதம்  மத்திய நீரியியல் துறையின் செயலர் சுப்புராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால், சிங்கத்தாகுறிச்சி, கீழவல்லநாடு, செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், உடன்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிலத்தடி நீரானது ஆண்டுக்கு 5.06 மீட்டர் குறைந்து வருவதாகவும், இது போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2016 ஆம் நவம்பர் மாதங்களில் கீழவல்லநாடு, வாகைகுளம், கட்டாலங்குளம், புதுக்கோட்டை, அல்லிகுளம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கீழவல்லநாடு அருண்மலை அருகே சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் நிறுவனம் சார்பில் சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நோக்கத்துடன் மிகப்பெரிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு வருகிறது. அதன் முன்னோட்டமாக தற்போது ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அதன் தொழில் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது இதர வியாபார நோக்கத்துடன்  பயன்படுத்தி கலவை கொள்கலன்களையும் அமைத்து உள்ளது. மேலும்   டீமேஜ் நிறுவனத்தை சுற்றிலும் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மக்கள் பயன்பாட்டு குளங்கள், விவசாய கிணறுகள் உள்ள சூழலில் இது போன்ற நிலத்தடி நீரை சட்டவிரோத உறிஞ்சி எடுக்கும் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.இதுகுறித்து ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருவைகுண்டம் வட்டாட்சியர், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல நீரியியல் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைத்து கிராமப்புற மக்கள் ஒன்றுதிரண்டு சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு  உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நோக்கத்துடன் அமைத்து வரும் டீமேஜ் நிறுவனம் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து

சோம்Oct 11, 2019 - 05:20:17 PM | Posted IP 108.1*****

வனவிலங்கு சரணாலயம் அருகில் தொழிற்சாலை அமைக்க அனுமதி கொடுத்தவன் எல்லாம் முட்டாள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory