» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

விவிடி சிக்னலில் எப்போது மேம்பாலம் அமையும் ? : போக்குவரத்தில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்

புதன் 4, செப்டம்பர் 2019 12:47:08 PM (IST)தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம் எப்போது அமையும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று காலை உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஒன்று அப்பகுதியில் சிக்கி தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியாக மாறி 11 வருடங்கள் ஆனாலும் அடிப்படை வசதிகளில் இன்னமும் நகராட்சியாக இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே தான் உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சி அமைந்தால் தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். 

2011 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி அப்படியே நின்று விட்டது. விவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்கும் திட்டமும் விரைவில் தொடங்கும் என அறவிக்கப்பட்டாலும் பாலம் அமைக்கும் பணி தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 

இந்நிலையில் இன்று (4ம் தேதி) காலை விவிடி சிக்னல் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சிக்னல் போடப்பட்டிருந்தது.பொதுவாக ஆம்புலன்ஸ்கள் சிக்னல்களில் நிற்க தேவையில்லை. மேலும் ஆம்புலன்ஸ் வந்தால் பிற வாகனங்கள் வழி விட வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால் ஆம்புலன்ஸ்க்கு முன்னால் தண்ணீர் லாரிகளும், பின்னால் ஆட்டோ, மற்றும் சரக்கு லாரியும், பக்கவாட்டில் பைக்குகளும் நின்றதால் மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் அந்த ஆம்புலன்ஸ் அப்படியே நின்றது. இதனால் செய்வதறியாது ஆம்புலன்சில் இருந்தவர்கள் தவித்தனர். பின்னர் ஒரு வழியாக மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு சென்றது.

அடிப்படை வசதிகளில் புறக்கணிக்கப்படுகிறதா தூத்துக்குடி ?

2006 2011 கால கட்டத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது தூத்துக்குடியில் புதிய மாநகராட்சி அலுவலகம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் ஆகியவை கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஆஷிஷ்குமார் இருந்த போது விவிடி சிக்னல் அருகே இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். நகரில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தினார். ஆனால் அவர் மாற்றலான பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அப்படியே நிற்கிறது என்றும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் அமைச்சராக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளார். 

அவர் கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே நலத்திட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தூத்துக்குடி மாவட்டத்தினை புறக்கணிப்பதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தலைநகராக தூத்துக்குடி இருக்கும் நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் கவனத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகளை எடுத்து சென்று உடனே  தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்கவும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தூத்துக்குடியில் கட்டுவதற்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ACHUDHANMar 19, 2020 - 09:53:58 AM | Posted IP 108.1*****

WORST TUTY CORPORATION

LingamFeb 20, 2020 - 09:36:14 AM | Posted IP 162.1*****

Varanum

A.ராஜாசெலவின்Jan 10, 2020 - 05:03:26 PM | Posted IP 108.1*****

நியூ பஸ்டாண்ட் எப்ப வரும் சார்

நிஹாSep 5, 2019 - 04:12:50 PM | Posted IP 162.1*****

என்கே அவர்களே...மீதமுள்ள மக்கள் காலியாகும்போதல்ல, அரசியல்வாதிகளின் குடும்பத்தில் எவரேனும் காலியாகும்போது நிச்சயம் உடனடியாக மேம்பாலம் அமைப்பார்கள்.

வைரமுருகன்.பாSep 5, 2019 - 02:33:36 PM | Posted IP 173.2*****

பாலமும் வாராது ஆக்கிரமிப்பு அகற்றவும் மாட்டார்கள் VVD சிக்னல்லுருந்து மில்லர்புரம் வரை 3வது ரோடு போட்டார்கள் யாருக்கு என்ன பயன் ???

ராமநாதபூபதிSep 4, 2019 - 04:12:25 PM | Posted IP 108.1*****

ஜெயலலிதா அப்போது மக்களிடம் ஒட்டு வாங்குவதற்கு வாயில் வந்ததை எல்லாம் விட்டு வடை சுட்டார். மக்களும் ஏமாந்து ஒட்டு போட்டனர். இப்போ நிம்மதியா போய் சேந்துட்டு அந்த அம்மா. மக்கள் யாரிடம் கேட்கமுடியும்

ராமநாதபூபதிSep 4, 2019 - 04:10:16 PM | Posted IP 108.1*****

கடம்பூர் தொகுதிக்கு அப்படி என்னத்தை செஞ்சிட்டாருன்னு இந்த செய்தில போட்டுஇருக்க

ராஜாSep 4, 2019 - 03:24:22 PM | Posted IP 162.1*****

கடம்பூருக்கு ஒன்னும் செய்யல. தூத்துக்குடிக்கு என்ன செய்யப் போராரு?

கர்ணராஜ்Sep 4, 2019 - 03:06:41 PM | Posted IP 162.1*****

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் VVD மேம்பாலம் உடனடி நடவடிக்கை தேவை

என்கேSep 4, 2019 - 02:34:10 PM | Posted IP 162.1*****

மீதமுள்ள மக்களும் காலியாகும்போது நிச்சயமாக அமைந்திருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory