» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

புரோக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வட்டாட்சியர் அலுவலகம் : பொதுமக்கள் அலைக்கழிப்பு

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2019 1:41:18 PM (IST)

தூத்துக்குடி வட்டாாட்சியர் அலுவலகத்தில் புரோக்கர்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சாதாரண பொதுமக்களின் மனுக்களை அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாவட்டஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆதிலிங்கராஜன் முருகேசன் (55). இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாரிசு சான்றிதழில் பெயர் திருத்துவதற்காக தாலுகா அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனு கொடுத்துள்ளார். இன்று வரை அவருக்கு பெயர் திருத்தம் செய்த சான்றிதழ் கிடைக்கவில்லை. இவர் மனு அளித்ததிலிருந்து தற்போது வரை 3 தாசில்தார்கள் மாறியும் சான்றிதழ் கிடைக்காமல் மன வேதனையில் உள்ளார். 

இது குறித்து ஆதிலிங்கராஜன் முருகேசன் நமது செய்தியாளரிடம் கூறும் போது, தூத்துக்குடியில் நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது தந்தை திருப்புகழ் நாடார் இறந்ததால் அவரது வாரிசுகளாகிய நாங்கள் வாரிசு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்ற 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தூத்துக்குடி வட்டாாட்சியர் அலுவலகத்தில் மனு செய்தோம். மனு செய்ததிலிருந்து 6 மாத காலமாக தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சான்றிதழ் வேண்டி நடையாய் நடந்தேன். சான்றிதழ் கிடைக்கவில்லை. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நீங்கள் அளித்திருந்த மனு தொலைந்து விட்டது என அலட்சியமாக பதில் தெரிவித்து என்னை அலுவலகத்திலிருந்து வெளியே செல்லுமாறு மிரட்டினார்கள் . அப்போதிருந்த தாசில்தார் சிவகாமி சுந்தரியிடம் முறையிட்டேன். அதற்கு அவர் புதிதாக மனு செய்யுமாறு கேட்டு கொண்டார். 

இதனால் மறுபடி புதிதாக திருத்தம் செய்வற்கான மனுவை விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு பல நாட்கள் அலைந்து கையெழுத்து பெற்று மறுபடியும் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு நடையாய் நடந்தேன். தற்போது அந்த சான்றிதழ் தூத்துக்குடி சார்ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கையிலிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி தலையிட்டு உடனே எனக்கு சான்றிதழ் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றார். 

புரோக்கர்களுக்கு முக்கியத்துவம்

தூத்துக்குடி தாலூகா அலுவலகம் இடம் மாறியும் குணம் மாறாமலே உள்ளது. புரோக்கர்கள் கொண்டு வரும் மனுக்களின் மீது அதிவேகமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பொதுமக்களின் மனுக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அடிக்கடி சான்றிதழ் நிலவரம் குறித்து கேட்டால் உங்கள் மனு தொலைந்து விட்டது என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே கீழ்நிலை அலுவலர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை தட்டி கழிப்பதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.எனவே மாவட்டஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு பொது மக்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மக்கள் கருத்து

செல்வாNov 11, 2019 - 02:44:46 PM | Posted IP 162.1*****

எனக்கு ரேஷன் கார்டு உள்ளது. எனக்கு ஒதுக்க பட்ட கடையில் போய் ரேஷன் பொருள் கேட்டல் விலை பட்டியல் சொல்ல மாட்டுக்காங்க ,அது போக கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள் ,மேலும் எனக்கு புது கார்டுக்கு மண்ணெண்ணெய் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள் ,அது போக அளவும் மிக குறைவாக உள்ளது. மிகவும் திமிராக பேசுறாங்க. ஆனால் பொருள்கள் கடத்த படுகிறது. தூத்துக்குடி கிருபை நகரில் உள்ள கடையில் இதெல்லாம் நடக்கிறது. யாரிடம் போய் சொல்ல கீழ் மட்ட ஊழியர்கள் அராஜகம் செய்றாங்க ????????????????

M.sundaramSep 16, 2019 - 03:58:29 PM | Posted IP 173.2*****

I gave an application for changes in the UDR in 20016. Since 3 years passed the canges could not be done till date. DRO and Sub Collector office issues to Tahsildar to submit the documents immediately without any delay. But I do not know houw Tahsildar is treating such letters. The VAO submit the documents to Tahsildar in Feb 2019 but the said documents are not yet forwarded to Sub Collector. There is no strict supervision upon the subordinate clerks. The officers hesitate to take departmental action against the delinquents.When the punishments like stoppage of increments, promotion and posting are imposed, the things will automatically come in the line. More over suitable action will also be taken against the supervisor officers also for not carry out the duties as per the departmental orders and rules. A register should be maintained at the government offices for the visitors who should enter their particulars , the section to which they are visiting and the purpose and time in and time out. Passes should be issued for such visitors. In implementing such procedure, only bonafied visitors can enter into govt offices.

சுதாகர்Aug 27, 2019 - 04:23:18 PM | Posted IP 162.1*****

சமூக விரோதிகளை விரட்டி விட்டால் தான் சரியாகி விடும்

NARTHAAug 27, 2019 - 03:16:13 PM | Posted IP 162.1*****

எல்லாம் பணம் படுத்தும் பாடு... எல்லாம் மக்களாகிய நாம் கையில் தான் உள்ளது

ராஜ்குமார்Aug 27, 2019 - 02:07:48 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சி

ராஜ்குமார்Aug 27, 2019 - 02:07:22 PM | Posted IP 162.1*****

டிஜிட்டல் இந்தியா

தமிழ்ச்செல்வன்Aug 27, 2019 - 02:04:19 PM | Posted IP 173.2*****

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அணைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் நாற்றம் அழுகி நாறுகிறது. என்ன செய்ய போகிறீர்கள்? பொது மக்களே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory