» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நவீனமயமாகும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் : லிப்ட், ஏசி, எஸ்கலேட்டர் வசதிகள் ஏற்படுத்த திட்டம்

செவ்வாய் 9, அக்டோபர் 2018 11:51:24 AM (IST)மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி இணைக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், 51 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்படுகிறது.

தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பழைய பேருந்து நிலையம். இது அண்ணா பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி நகர்புற பேருந்துகளும், மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், நாளும் பொழுதும் தொடர்ந்து இயங்கும் இந்த பேருந்து நிலையம், அமைப்பை பொருத்தவரையில் மிகமோசமாக உள்ளது. 

மிகக்குறுகலான பாதை, தூர்நாற்றம் வீசும் சாக்கடைகள், தண்ணீர் வசதி குறைவாக உள்ள கழிப்பிடம், புழுதி பறக்கும் நடைபாதைகள். இவை இதுவரை இருந்த தூத்துக்குடி பேருந்து நிலையம். இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது: ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 51 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுகிறது. 4 மாடி கட்டிடங்களுடன், லிப்ட், ஏசி, எஸ்கலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. பேருந்து நிலையத்துக்கு அருகில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. 

தற்போது பேருந்து நிலையம் மிகக்குறுகலாக இருப்பதால், பணிமனைக்குச் சொந்தமான இடத்தையும் சேர்த்து 3.36 ஏக்கர் பரபரப்பளவில் விரிவுபடுத்தப்படுகிறது.’ மேலும், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு தனியறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, காவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, முன்பதிவு கவுண்டர்கள், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. பயணிகள் காத்திருப்புக்கா 60 இருக்கைகளுடன் ஏசி ரூம், 131 இருக்கைகளுடன் சாதாரண ரூம், தங்கும் வசதி ஆகியவைகளும் அமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையத்துக்கு வரும் மக்கள் வந்து செல்ல ஏதுவாக பார்க்கிங் வசதி, பிக்அப் பாயிணட், டராப் பாயிண்ட் போன்றவைகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 13, 2018 - 11:29:22 AM | Posted IP 141.1*****

VVD சிக்னல் மேம்பாலம் என்னாச்சு? லாரி டெர்மினல் என்னாச்சு? ஆட்டோ நகர் என்னாச்சு? ஒண்ணாம் கேட் ரெண்டாம் கேட் சுரங்கப்பாதை என்னாச்சு? பத்து வருடங்களாக நடக்கும் பாதாள சாக்கடை என்னாச்சு? நகரில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு எத்தனை வருடம் ஆச்சு தெரியுமா? நாலாவது குடிநீர் திட்டம் என்னாச்சு? கோரம்பள்ளம் தூர்வாருதல் என்னாச்சு? கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் என்னாச்சு? இருக்கும் ஒரே பிரதான சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றும் திட்டம் என்னாச்சு? அதேபோலத்தான் இதுவும் கடந்து போகும்

pandiOct 12, 2018 - 01:33:18 PM | Posted IP 172.6*****

காமெடி பண்ணாதீங்க

ஒருவன்Oct 10, 2018 - 03:30:02 PM | Posted IP 141.1*****

முன்னால் ... பாதாள சாக்கடை திட்டம் அது , இது சொல்லி ரோட்டை நாசமாகி , சாக்கடையாகி பணத்தை சுருட்டி விட்டாச்சு , அதே போல் இன்று அது இது புது பஸ் ஸ்டான்ட் , பாலம் , ஸ்மார்ட் சிட்டி ,..... சொல்லி பணம் வந்தவுடன் ஆட்டை போடுவாங்க ... கொஞ்ச நாள் ல பஸ் ஸ்டாண்ட் காணாமல் போய் விடும் ...

மாவீரன்Oct 10, 2018 - 01:15:23 PM | Posted IP 172.6*****

51 கோடியில் இது மாதிரி பஸ் ஸ்டாண்டா ? எல்லாரும் சாப்பிட்டது போக மீதி எவ்ளவு மிஞ்சுமோ ? பஸ் ஸ்டாண்ட் படம் நல்ல பாருங்க போதும்

மதன்Oct 10, 2018 - 01:01:37 PM | Posted IP 162.1*****

2100லதான

சுந்தரிOct 10, 2018 - 11:27:23 AM | Posted IP 172.6*****

இதை கட்டிமுடிக்க ஒரு பத்து வருஷம் ஆய்டாது...

muhtuhOct 9, 2018 - 04:54:38 PM | Posted IP 162.1*****

இது வெறும் செய்தியாக மட்டும் இல்லாமல் செயல்பாட்டிற்கு வந்தால் நல்லது

ராமநாதபூபதிOct 9, 2018 - 12:47:15 PM | Posted IP 141.1*****

ஓப்பனிங்எல்லாம் நல்லாத்தான் இருக்கு உங்க கிட்டே பினிஷிங் சரி இல்லையே

கண்ணன்Oct 9, 2018 - 12:32:24 PM | Posted IP 172.6*****

பஸ்ஸ்டாண்ட் வந்திருச்சு சரி;ஆனால் க்ராமங்களுக்கெல்லாம் பஸ்ஸுதான்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors

Thoothukudi Business Directory