» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

ஐபிடியில் படித்த பெண்ணுக்கு கனரா வங்கியில் வேலை: துாத்துக்குடியில் பாராட்டு விழா

ஞாயிறு 23, ஏப்ரல் 2017 12:17:41 PM (IST)



வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் துாத்துக்குடி ஐபிடி நிறுவனத்தில் அரசுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் டிரெயினிங் நிறுவனமான ஐபிடி இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு வங்கி தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1,2,4 விஏஓ உள்ளிட்ட பலவகையான தேர்வுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில், ஐபிடி பயிற்சி மையம்,  பாளை ரோட்டில் உள்ள சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தின் அருகே செயல்பட்டு வருகிறது.  

இங்கு படித்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்று கனரா வங்கியில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவி ஞானபபிதாவுக்கு துாத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஐபிடி இயக்குநர் சிவராம் மாணவிக்கு பாராட்டி பரிசு வழங்கினார்.  இதில் கலந்து கொண்டு பேசிய மாணவி ஞான பபிதா கூறுகையில், ஐபிடி நிறுவனமானது ஒவ்வொரு மாணவ, மாணவிகளை தனிப்பட்ட முறையில் கவனித்து பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான சூழலை ஏற்படுத்தி தருகின்றனர் என்றார். விழாவில், வங்கி வேலை பெற்ற மாணவியை, ஐபிடி ஆசிரியர்கள, மற்றும் மாணவ - மாணவிகள் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam


Pop Up Here


Black Forest Cakes


Johnson's Engineers


CSC Computer Education

Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory