» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நான்கு வழிச்சாலையில் தொடரும் உயிரிழப்புகள் : கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை ?

செவ்வாய் 21, மார்ச் 2017 6:46:39 PM (IST)



திருநெல்வேலி துாத்துக்குடி 4 வழிச்சாலையில் இருக்கும் பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

அனைத்து வாகனஓட்டிகளும் விரைவாக செல்லவும்,பொருளாதார மேம்பாட்டிற்காகவும் 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் திருநெல்வேலி துாத்துக்குடி 4 வழிசாலையில் கிட்டத்தட்ட 3 இடங்களில் இருக்கும் பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் சாலையில் திடீரென ஒட்டுப்பாேட்டது போல் ஒரு கோடு உள்ளது. அதனை தொடர்ந்து மேடு போல் ஏறி செல்கிறது.இதை வேகமாக வரும் வாகனஓட்டிகளால் சரியாக கவனிக்கமுடியாது என்பதே நிதர்சனம்.

இதனால் பேருந்து,கார் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்பவர்கள் திடீரென குலுங்கி நிலை தடுமாறுகின்றனர்.இதனால் முதுகுவலி, எதிர்பாராத காயங்கள் ஏற்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பைக்கில் வருபவர்கள் இதை கவனிக்காமல் வேகமான அதன் மீது ஏறி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதில் உச்சகட்டமாக சென்ற பிப்ரவரி மாதம் திருநெல்வேலியிலிருந்து துாத்துக்குடிக்கு வந்த இளைஞர் ஒருவர் இந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டி ஓட்டியதால் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தெய்வச்செயல்புரம் பொட்டலுாரணிக்கு இடையே 2 இடங்களில் இது போல் பள்ளங்கள் உள்ளது. அது போல் பொட்டலுாரணிக்கும் வாகைக்குளத்திற்கும் இடையே ஒரு பள்ளம் உள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட டோல்கேட்டில் கேட்ட போது தாங்கள் இதற்கு பொறுப்பல்ல என்றும் இதற்கென தனியே சாலைகளை பழுது பார்க்கும் பிரிவு இருப்பதாகவும் தெரிவித்தார். 

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பிரதீப்குமாரிடம் நம் செய்தியாளர்கள் குழு தொடர்பு கொண்டு கேட்ட போது ஒரு வார காலத்திற்குள் இது சம்பந்தமக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இவ்விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்குரிய பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகனஓட்டிகள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

princeMar 23, 2018 - 04:46:36 PM | Posted IP 117.2*****

ஹெல்மெட் விட பாதுகாப்பான ரோடு தான் முக்கியம் ..

rajaMar 23, 2018 - 04:46:03 PM | Posted IP 117.2*****

உருப்படியான செய்தி... நன்றி. இதை போல சமூக பொறுப்புள்ள செய்திகளை அதிகமாக வெளியிடுங்கள்

mayakumarDec 9, 2017 - 10:39:37 AM | Posted IP 103.3*****

ஹலோ . தூத்துக்குடி துறைமுகம் ரோடு அதாவது மீன் வள கல்லூரி சாலை நான்கு வழி சாலை ஒரு தண்ணீர் செல்லும் வாய்க்கால் போல், காரணம் அந்த அளவுக்கு அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனம் , இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரை இழக்கும் நிலைமை ,,,,,....

publicDec 1, 2017 - 08:45:23 PM | Posted IP 106.6*****

தூத்துக்குடி திருநெல்வேலி ரோடு குறை கூறுபவர்கள் என் தூத்துக்குடி மதுரை திருநெல்வேலி மதுரை ரோடு குறை கூறுவதில்லை ஏன் என்றால் ஜாதி தான் காரணம்

nanbanAug 17, 2017 - 01:19:31 PM | Posted IP 125.2*****

draw a white line on the place so people will reduce their vehicle speed.

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்Jul 3, 2017 - 05:59:22 AM | Posted IP 107.1*****

தூத்துக்குடி,to,திருநெல்வேலிசாலையில் மோட்டார்சைக்கிளின்.மீதிமிஞ்சியவேகத்திலும்.வாகனஒட்டிகள்.செல்லுவதும்.விபத்துகளுக்கு.காரணம்.நெடுஞ்சாலைதுறைபழதுடைந்த.சாலைகளை.சரிசெய்வதில்.மெத்தனம் காட்டுவது.கூடாது.

நிஹாMar 22, 2017 - 03:12:22 PM | Posted IP 117.2*****

உருப்படியான செய்தி... நன்றி. இதை போல சமூக பொறுப்புள்ள செய்திகளை அதிகமாக வெளியிடுங்கள்.

ஒருவன்Mar 21, 2017 - 10:40:30 PM | Posted IP 59.96*****

வடை நாட்டுக்காரன் (இந்தி வெறியன்) கொண்டு வந்த (சுங்க சாவடி) சுரண்டல் சாவடி டோல் கேட் ஊழியர்கள் எல்லாம் ரோட்டை பத்தி (ரோடு சேதம் அடைந்தால்) கவலை பட மாட்டார்கள், எல்லாம் பணத்துக்காக மட்டும் தான் தீயா வேலை பார்ப்பாங்க..

ஒருவன்Mar 21, 2017 - 10:36:11 PM | Posted IP 59.96*****

ஹெல்மெட் விட பாதுகாப்பான ரோடு தான் முக்கியம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors



Thoothukudi Business Directory