» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

டெல்லியின் நிலை தூத்துக்குடிக்கும் வரும் அபாயம்? பொதுமக்கள் அச்சம்

வியாழன் 10, நவம்பர் 2016 11:52:02 AM (IST)காற்று மாசுபாட்டால் டெல்லி திணறி வருவது போல் அடுத்து துாத்துக்குடியும் மாறுமோ? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை கோவைக்கு அடுத்தபடியாக தொழில்வளர்ச்சி அடைந்துள்ள நகரம் துாத்துக்குடி தான். நம் நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளன.இதன் முலம் ஏராளமான மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் அதிலிருந்து வெளியேறும் புகையால் எதிர்காலத்தில் துாத்துக்குடி அடுத்த டெல்லியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

துாத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வருங்கால சந்ததியினர் வாழ ஆரோக்கியமான சூழலை விட்டுச்செல்கிறோமா என்பது தான் கேள்வி. தமிழகத்தின் பிற மாவட்டங்களை போல் துாத்துக்குடியிலும் ஒரு காலத்தில் ஒழுங்காக மழை பெய்தது என பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள்.ஆனால் பெரிய நிறுவனங்களின் வருகைக்கு பிறகு ஒழுங்காக மழை பெய்கிறதா, அப்படியே பெய்தாலும் அது குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளை பூர்த்தி செய்கிறதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 

இது போதாதென்று துாத்துக்குடியில் மேலும் அனல் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களின் புதிய யூனிட்டுகள் வரப்போகிறது என பேச்சு உலவுகிறது. இதனால் துாத்துக்குடி விரைவில் அடுத்த டெல்லியாக மாறும் என இப்போதே சுற்றுச்சூழலியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துாத்துக்குடி பொதுமக்கள் தோல்நோய்,சுவாச பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.இதில் புதிதாக நிறுவனங்கள் வந்தால் சொல்லவே வேண்டாம். இங்கு துறைமுகம் உள்ளது.மேலும் இங்கு நிறுவனம் அமைத்தால் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான கரி உள்ளிட்ட மூலப்பொருட்களை சுலபமாக கொண்டுவரலாம் என கருதுகின்றனர். 

இதன் விளைவே துாத்துக்குடியை நாேக்கி பெரிய நிறுவனங்கள் வர காரணமாகிறது. மாவட்ட நிர்வாகம் மேலும் மேலும் இது போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி ஏன் அளிக்கிறது என தெரியவில்லை. வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து

குமார்Jul 24, 2017 - 12:16:18 PM | Posted IP 103.3*****

ஒட்டு மொத்த மக்களும் வேரா இடம் குடி பெயரனும் அதான் உண்மை அதி விரைவில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்மே 5, 2017 - 09:48:47 PM | Posted IP 27.62*****

மாவட்டத்தின்வளர்ச்சிக்கு.தொழில்வளம்தேவை.முக்கியம்தூய்மையான.சுகாதாரம் சுத்தமானகாற்று.தேவை.தொழிற்சாலையினால்.பாதிப்புகளைகட்டுபடுத்த.தேவைநடவடிக்கை.செய்யுமா.???

தமிழன்Mar 31, 2017 - 04:04:34 PM | Posted IP 182.7*****

அரசுதான் காரணம் ..வெளிமாநிலக்காரங்களுக்குத்தான் வேலை ..மணல் அள்ளுறதையும் தண்ணி கேன் விக்குறதையும் அரசு கண்டுக்க மாடிக்குறாங்க .மரம்நட்டா அத பராமரிக்க மாடிக்குறாங்க ..என்னத்த சொல்லி புலம்ப. கேவலமா போய்ட்டாங்க

குமார்Jan 18, 2017 - 08:58:53 PM | Posted IP 27.62*****

ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை எப்பொழுதோ தடை செய்திருக்க வேண்டும். அணையில் நீர் இல்லை ஆனால் ஆலைகளுக்கு மட்டும் நீர் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. முதலில் தூத்துக்குடியை மாசு படச்செய்யும் தனியார் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இவர்கள் நாறடிக்கும் இடம் நம்முடையது. பலன் எவனுக்கோ செல்கிறது. வேலை செய்பவன் முதல் எல்லாம் வேரு யாரோ. நமக்கு ரோடு, மருத்துவ வசதி , பூங்கா என்று எலும்புத்துண்டை வீசுகிறான். ஆலையை சுற்றியுள்ள ஊர்களின் தலைவர்கள் அவர்களின் வருமானத்திற்காக அந்தந்த ஊர் மக்களை ஏமாற்றி அடகு வைத்து ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை கறக்கின்றனர். மின்சார இணைப்பை துண்டித்து பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும். வியாபார ரீதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் அனைத்து நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். இப்பொழுதே இப்படி என்றால் கடும் கோடையில் வேகமாக நிலத்தடி நீர் குறைந்துவிடும். எனவே அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாத்து அனைவருக்கும் பகுந்தளிக்க வேண்டும்.

roshanNov 24, 2016 - 10:54:08 AM | Posted IP 122.1*****

முதலில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் தண்ணீரை நிறுத்துங்கள் தூத்துக்குடி மாவட்டம் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கும்

SubramanianNov 13, 2016 - 09:54:58 PM | Posted IP 27.62*****

Good article

ஒருவன்Nov 10, 2016 - 07:20:46 PM | Posted IP 59.96*****

மோடி 500 , 1000 ரூபாய் செல்லாது போல , மினெரல் வாட்டர் கேன் செல்லாது (தடை செய்தால்) என்று சொன்னால் நாடு உருப்படும் ..

குலாம்Nov 10, 2016 - 03:47:16 PM | Posted IP 182.7*****

தூத்துக்குடிக்கு தேவையான குடிநீர் கோரம்பள்ளம் குளத்தில் இல்லை என்கிறார்கள் ஆனால் குளத்தின் அருகில் இருக்கும் தனியார் மினரல் வாட்டர் தட்டுபாடு இல்லாமல் குடிநீர் பாட்டிலை விற்பனை செய்து வருகிறது எப்படி???

karnarajNov 10, 2016 - 03:05:06 PM | Posted IP 117.2*****

தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை நிறுத்த வேண்டும். ஏற்கெனெவே தண்ணீர் தட்டுப்பாடு. தனியார் நிறுவனங்கள் கடல் நீரை எடுத்து சுத்திகரித்து தங்கள் தேவையை பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விடுத்து இளைஞரகள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

பாண்டியன்Nov 10, 2016 - 02:48:59 PM | Posted IP 117.2*****

நண்பர்களே யாருக்கானவேலை வாய்ப்பு என்பதையும்சேர்த்து சிந்தியுங்கள். பாதிப்பு மண்ணின் மக்களுக்கு பணி மற்றும்வேலை வாய்ப்புகள் அனைத்தும் பக்கத்து மாவட்ட மாநில மக்களுக்கு .

சுபாNov 10, 2016 - 02:15:49 PM | Posted IP 210.2*****

முதல்ல தனியார் நிறுவனங்களை கோடிக்கணக்கில் மரம் நடவையுங்கள் ஐயா

ரொபின்Nov 10, 2016 - 01:33:24 PM | Posted IP 117.2*****

முதல்ல அத மூடுங்க அப்போதான் தூத்துக்குடி நல்ல இருக்கும்.

பாலாNov 10, 2016 - 12:14:54 PM | Posted IP 117.2*****

இது முற்றிலும் உண்மை! அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest Cakes

Anbu Communications

Joseph MarketingCSC Computer Education


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory