» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார்: ஐ.டி. துறையில் சாதித்த தூத்துக்குடி அண்ணாச்சி!!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2016 11:44:27 AM (IST)

உலக அளவில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பணக்காரர்கள் 100 பேர் அடங்கிய பட்டியலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிவ் நாடார் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஐ.டி துறையில் முதல் 100 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7800 கோடி டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்த படியாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் செயல் அதிகாரியான ஜெப் பிசோஸ் 6620 கோடி டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கும், நான்காவது இடத்தில் ஆரக்கிள் நிறுவன தலைவர் லாரி எல்லிசன்னும் உள்ளனர்எட்டாவது இடத்தில் சீனா அலிபாபாதலைவர் ஜேக் மோ 2580 கோடி டாலர் சொத்துக்களுடன் உள்ளார். இந்தியாவின் விப்ரோ தலைவரான அசிம் பிரேம் ஜி 1600 கோடி டாலர் சொத்துகளுடன் 13 வது இடத்திலும், எச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் 1160 கோடி சொத்துக்களுடன் 17 வது இடத்தில் உள்ளனர்.

அமெரிக்கா வாழ் இந்தியரான சிம்பொனி டெக்னாலஜி செயல் அதிகாரி ரொமெஷ் வாத்வானி மற்றும் சிண்டெல் நிறுவனத்தலைவர் பாரத்தேசாய், அவரது மனைவி நீரஜாவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்த 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 89200 கோடி டாலர் என்றும் இது சென்ற ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவ் நாடார் 

ஷிவ்  நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பி.எஸ்.ஜி. (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.


மக்கள் கருத்து

BabistonJul 6, 2017 - 08:26:02 AM | Posted IP 168.2*****

தூத்துக்குடி ல ஹெச்சிஎல் கம்பெனி ஸ்டார்ட் பண்ணுங்க சார் தூத்துக்குடி வளru ம்

selva studioMar 19, 2017 - 11:22:04 PM | Posted IP 157.5*****

All the best

saravanaFeb 17, 2017 - 01:06:10 PM | Posted IP 103.2*****

சைமன் : நீ என்ன பண்ணுன ?

சைமன்Jan 8, 2017 - 09:12:26 PM | Posted IP 117.2*****

மண்ணின் மைந்தன் தூத்துக்குடி மக்களுக்கு என்ன செய்தார்?

டர். எ. ASOKDec 31, 2016 - 06:17:39 PM | Posted IP 117.2*****

EXCELLENT

மு .முத்துப்பாண்டிNov 11, 2016 - 04:57:23 PM | Posted IP 45.12*****

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

S.M.SahayarajOct 28, 2016 - 05:11:42 PM | Posted IP 106.2*****

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தூத்துக்குடி ஷிவ் நாடார் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

ரகுOct 14, 2016 - 10:11:19 AM | Posted IP 122.1*****

தூத்துக்குடி க்கு பெருமை சேர்த்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் . மேலும் நம் பகுதி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் மிகயூம் மகிழ்ச்சி யாக இருக்கும் .

MOHANSep 28, 2016 - 10:39:54 AM | Posted IP 210.2*****

GREETINGS, ALL THE BEST SIR.

சண்முக சுந்தர்Sep 8, 2016 - 01:16:26 PM | Posted IP 117.2*****

பாராட்டுக்கள் மகிழ்ச்சி ஆனால் அவர் பிறந்த ஊருக்கு, பிறந்த மண்ணுக்கு, மக்களுக்கு எதாவது நல்லது செய்கிறாரா ? அப்படி செய்கிறார் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கணேஷ்Sep 7, 2016 - 04:39:36 PM | Posted IP 122.1*****

இதுவும் ஒரு போட்டியா ?? ஏழை , எளிய மக்களுக்கு கொஞ்சம் சாப்பாடா கொடுக்கலாமே ?????

செல்வம்Aug 14, 2016 - 02:57:54 PM | Posted IP 1.39.*****

I AM PROUD OF U

M.sundaramAug 14, 2016 - 10:23:39 AM | Posted IP 61.3.*****

Kudos to Shiv Nadar. He brings laurel to Thoothukudi.

தங்க duraiOct 10, 1471 - 04:30:00 AM | Posted IP 122.1*****

ஆல் தி பெஸ்ட் அண்ணாச்சி

surekaAug 12, 2016 - 05:55:23 PM | Posted IP 61.1.*****

தூத்துக்குடி மண்ணை பெருமைப்பட வைத்துவிட்டடீங்க. நன்றி ஐயா .

ரவிச்சந்திரன்Aug 12, 2016 - 05:21:26 PM | Posted IP 117.2*****

பாராட்டுக்கள்

நாடார்Aug 12, 2016 - 03:48:05 PM | Posted IP 122.1*****

வணங்குகிறோம் ஐயா

sundarAug 12, 2016 - 01:51:05 PM | Posted IP 117.2*****

பாராட்டுக்கள்

PudhiyavanAug 12, 2016 - 11:59:28 AM | Posted IP 103.3*****

வாழ்த்துக்கள்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications

Joseph Marketing


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory