» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

வக்கீல்கள் போராட்டத்தால் பைசல் ஆகும் வழக்குகள்

செவ்வாய் 26, ஜூலை 2016 11:24:34 AM (IST)

வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில்புரிவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில், ஊர்வலம், முற்றுகை போராட்டம் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிரடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதற்காக, வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, புது விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த புதிய விதிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது மற்றும் சுதந்திரமாக தொழில்புரிவதை தடுக்கும் வகையில் உள்ளது என கூறி இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் அவசர வழக்குகள் மட்டும் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தால் பாதிக்கப்படுவது வழக்கம் போல அப்பாவி பொதுமக்கள் தான்.

நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சில வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருந்தார்.  சாதாரணமாகவே ஒரு வழக்கு வாய்தா, ஜாமின் என ஜவ்வாக இழுத்து அது முடிவதற்கு பல வருடங்கள் ஆகிறது. இதுவே பொதுமக்களை பணம், காலம் என அனைத்தையும் செலவு செய்து அவர்களை மன வேதனைக்கு  ஆளாக்குகிறது. மக்களை நீதித்துறை மீது நம்பிக்கையை பாதி இழக்க செய்து விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டனர். 

தற்போது வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இதனால் தங்களின் பிரச்சனைகளுக்காக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் என்ன செய்வது என்ற யோசனையில் உள்ளனர். நீதித்துறை மீது இருக்கும் கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம்பிக்கையும் இதனால் போய் விடும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையில் போலீசாருக்கு தான் வேலை சுலபமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சிறு சிறு பிரச்சனைகளுக்கு வழக்கு பதிய வேண்டும் என வருபவர்களை இரு தரப்பிலும் பேசி சமாதானம் பேசி எழுதி வாங்கி விட்டு அனுப்பி விடுகின்றனர்.

இதனால் பணச்செலவு, நேர விரயம், ஒவ்வொரு வாய்தாவுக்கும் ஆஜராக வேண்டும் என்ற பிரச்சனை இல்லை என புகார் கொடுக்க வந்தவர்கள் நிம்மதியுடன் தங்களது வேலைகளை பார்க்க செல்கின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என நம்பும் மக்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டு மீண்டும் பணிக்குதிரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Johnson's EngineersFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsThoothukudi Business Directory