» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!!
புதன் 2, ஏப்ரல் 2025 4:03:49 PM (IST)
கடலூரில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் விஜய் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக சுமார் 9 பேரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் கடலூர் அருகே உள்ள எம்புதூர் கிராமத்தில் முக்கிய குற்றவாளி மொட்டை விஜய் என்பவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து மொட்டை விஜய்யை போலீசார் பிடிக்க முயன்றனர். அனால் அவர் வீச்சருவாவை எடுத்து இரு போலீசாரை தாக்கி உள்ளார். வீச்சருவா தாக்கியதில் கோபி மற்றும் கணபதி ஆகிய போலீசார் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் மொட்டை விஜய் என்பவரை சுட்டு பிடித்ததில் அவர் உயிரிழந்தார்.
மேலும், சுட்டு கொல்லப்பட்ட மொட்டை விஜய்யின் மீது கடலூர் மற்றும் புதுச்சேரியில் சுமார் 33க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன நிலையில் அவர் வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். மொட்டை விஜய் என்பவர் இக்கூட்டத்திற்கு தலைவனாக இருந்ததும் தெரியவந்தது. தற்போது அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு. காயம் அடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் மிதந்த அக்காள்-தங்கை உடல்கள் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:50:05 AM (IST)

தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:09:48 PM (IST)

பாம்பன் புதிய பாலம்; ராமேசுவரம் - தாம்பரம் ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 2:01:19 PM (IST)

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்!
சனி 5, ஏப்ரல் 2025 5:41:21 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சனி 5, ஏப்ரல் 2025 12:14:24 PM (IST)

ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சனி 5, ஏப்ரல் 2025 11:25:34 AM (IST)
