» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:43:02 PM (IST)

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் "கட்சியின் கோட்பாடுகள், சட்டத் திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கிய காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருவதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி உத்தரவு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓகே ரைட்..! 

அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ விளக்கம்: என் மீது நடவடிக்கை எடுத்ததால் கவலை இல்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை  தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டு விட்டதால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான். ஆர்எஸ்எஸ் பேரனியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

8610015883 முத்துராஜாOct 8, 2024 - 09:28:24 PM | Posted IP 172.7*****

அடுத்தகட்ட நடவடிக்கை மக்கள் ஆவலுடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory