» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரி புதிய கூட்டமைப்பு உருவாக்கம்!

வியாழன் 3, அக்டோபர் 2024 4:23:34 PM (IST)

கன்னியாகுமரியில் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரி "மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள IREL மணல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரியும் கடந்த 01.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக எடுத்து செல்வதற்கு, மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கொளரவத் தலைவராக பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார், அமைப்பாளராக G.அன்டன் கோம்ஸ், துணை அமைப்பாளர்களாக நாஞ்சில் G.R. சேவியர், முத்துகுமார் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் ராஜா (சென்னை) மற்றும் உயர்மட்ட கமிட்டியில் அருட்பணி.டன்ஸ்டன், அருட்பணி. பிரான்சிஸ் சேல்ஸ், ஜான் அலோசியஸ், தேவதாஸ், கிறைஸ்ட் மில்லர், மணி (சென்னை), ஹென்றி டிபேன் (மதுரை), அருள்ராஜ், பத்மதாஸ், சேவியர் மனோகரன், ஜெபமணி, ஜான்கிறிஸ்டோபர்,  வெற்றிவேல், விக்ரமன், அல்காலித், கருங்கல் தாஸ், தாமஸ், A.S.ரவி, அலெக்ஸாண்டர், தா.வி.ராகவராஜ், பொன்னுலிங்க ஐயன், செல்வி.M.கிறிஸ்டி ரமணி, பிளவர் மேரி, ரேச்சல் மேரி ஆகியோர் தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டமாக தேசிய மற்றும் மாநில அளவில் போராட்டத்தை விரிவுப்படுத்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். இத்தகவலை அகிய இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory