» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

வெள்ளி 26, ஜூலை 2024 3:35:41 PM (IST)

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்கலாமா? என்று அரசிடம் கேள்வியெழுப்பினார்.

கல்வராயன் மலைப் பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசுக் குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியும் கல்வராயன் மலைக்கு உடன் செல்ல வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory