» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர் காத்த ஓட்டுநர் : முதல்வர் நெகிழ்ச்சி

வெள்ளி 26, ஜூலை 2024 11:00:22 AM (IST)



வெள்ளகோவிலில் பள்ளிக் குழந்தைகளுடன் வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த போதும், குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகிலுள்ள தனியார்மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

நெஞ்சுவலியால் துடித்தார்: வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தபோது,திடீரென நெஞ்சு வலிப்பதாக சேமலையப்பன் கூறியுள்ளார். வலியால் துடித்த அவர் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே வேனின் ஸ்டீயரிங்கில் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் விபத்தை தவிர்த்து, உயிர் பிரியும்தருணத்திலும் சாலையோரத்தில் பத்திரமாக வேனை நிறுத்திய சேமலையப்பனின் செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.

முதல்வர் நெகிழ்ச்சி: இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!’ என குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory