» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமச்சீர் கல்வியில் தனியார் பாடப் புத்தகங்கள்: பள்ளிக்கல்வித்துறை அனுமதி

வெள்ளி 19, ஜூலை 2024 12:19:57 PM (IST)

தமிழகத்தில் சமச்சீர் கல்வியில் தனியார் பாடப் புத்தகங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குளறுபடி  ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வரையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது அமலானது முதல் தமிழ்நாடு பாடநுால் கழகம் அச்சிடும் புத்தகங்களை மட்டுமே, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசின் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி அதே பாடத்திட்டத்தை பின்பற்றும் வகையில் 8ம் வகுப்பு வரை பிற தனியார் வெளியீட்டாளர்கள் தயாரிக்கும் பாட புத்தகங்களையும் பின்பற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் அனுமதி பெற்று உள்ளன. இதனால் மாணவர்களுக்கான பாடப் புத்தக வினியோகம் மற்றும் கற்பித்தல் முறைகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சில தனியார் பள்ளிகள் அரசின் தமிழ், ஆங்கில பாட புத்தகங்களை மட்டும் வாங்கி விட்டு மற்ற பாடங்களுக்கு பிற வெளியீட்டாளர்களின் புத்தகங்களை பயன்படுத்த துவங்கி உள்ளன. இதனால் அரசின் பாடப் புத்தகங்களை அச்சடிப்பதிலும், வினியோகம் செய்வதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடிக்கு உரிய தீர்வு காணவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் அரசின் புத்தகங்கள் மட்டுமின்றி தனியார் புத்தகங்களை பயன்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory