» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

வெள்ளி 19, ஜூலை 2024 10:50:28 AM (IST)

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 19) கடைசி நாளாகும்.

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். நிகழாண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2-இல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏ-இல் 1,820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இரவு 11.59 மணிக்குள் தோ்வாணைய இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருத்த வாய்ப்புகள் அளிக்கப்படும். முதல்நிலைத் தோ்வு செப். 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

எச்சரிக்கை அவசியம்: குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் தொடா்பாக இடைத் தரகா்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் எச்சரித்துள்ளது. இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் தோ்வரே முழுப் பொறுப்பாவாா். தோ்வா்கள் பூா்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தை இறுதியாக சமா்ப்பிக்கும் முன்பு நன்கு சரிபாா்க்க வேண்டும் என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

p.jayakumarJul 21, 2024 - 06:32:05 PM | Posted IP 172.7*****

I legi jap

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory