» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 11:15:34 AM (IST)
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர் மாதேஸ்வரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மாதேஸ்வரனை தேடிய நிலையில், திங்கள்கிழமை இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவரின் சடலம் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மாணவரின் உறவினர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










