» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இதுவே என் பணியின் கடைசி நாள்! பேருந்தை கட்டியணைத்து அழுத ஓட்டுநர்!!
வியாழன் 1, ஜூன் 2023 8:24:54 PM (IST)

ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டியணைத்து முத்தமிட்டு ஓய்வுபெற்ற ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் 30 ஆண்டுகளாக பணியாற்றிய ஓட்டுநர் முத்துப்பாண்டி 60 வயது நிரம்பிய நிலையில் பணி ஓய்வு பெற்றார். முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கினார்.
இன்று காலையுடன் அவருக்கு பணி முடிந்த நிலையில் தான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை இன்று காலை கடைசியாக இயக்கி ஓய்வு பெற்றார். அப்போது அதனை வணங்கி முத்தமிட்டு அரசுப் பேருந்தை கட்டித் தழுவினார். கண்ணீர் ததும்ப அரசுப் பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










