» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் ஆகலாம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வியாழன் 1, ஜூன் 2023 5:09:32 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும் திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 இலட்சம் மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாச்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி. என்ற முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்:04633-214487 மற்றும் அலைபேசி எண்:7448828513 மூலமாகவோ விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்; துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










