» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்

வியாழன் 1, ஜூன் 2023 5:02:53 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் 32 நபர்களும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 முதல்நிலை தேர்வில் 30 நபர்களும் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தற்போது தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக எதிர்வரும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் TNUSRB-SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பில் முன்னணி பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வாரம் ஒரு முறை மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு 04633-213179 மற்றும் 6381552624 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory