» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் 7ம் தேதிக்கு முன் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!!

வியாழன் 1, ஜூன் 2023 12:13:16 PM (IST)

"ஜூன் 7ம் தேதிக்கு முன் பள்ளிகளை திறந்தால்  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது. அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory