» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்: குமரியில் கோலாகலம்!!

வியாழன் 1, ஜூன் 2023 10:58:29 AM (IST)



கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அம்மன் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது. விழாவின் 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தேரோட்டத்த துவக்கி வைத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து ரத்து

தேரோட்டத்தையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்தா கேந்திரா தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வசதியாகவும், சுற்றுலா பயணிகளும் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வசதியாகவும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory