» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூருக்கு 50 பேர் புக் செய்தால் சிறப்பு பேருந்து: போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

புதன் 31, மே 2023 8:53:48 AM (IST)

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக குமரி மாவட்டத்தின் எந்த ஊரில் இருந்தும் 50 பேர் சேர்ந்து புக் செய்தால் பேருந்து சேவை இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் ஜெரோலின் கூறுகையில், "வழக்கமாகவே கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை டிப்போக்களில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் 30 பேருந்துகள் இயக்குவது வழக்கம். வரும் 2-ம் தேதி, திருச்செந்தூரில் வைகாசி விசாகம் வருகின்றது. இதனால் வரும் ஜூன் 1-ம் தேதி காலை முதல், ஜூன் 3-ம் தேதிவரை தினமும் 100 பேருந்துகள் இந்த டிப்போக்களில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும், 50 பேர், அல்லது அதைவிட அதிகமானோர் திருச்செந்தூர் செல்லவிரும்பினால் அவர்கள் ஊரில் இருந்தே திருச்செந்தூர் அழைத்துச்செல்ல சிறப்புப் பேருந்துகள் விடப்படும். இதற்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பம் வழங்கவேண்டும்.

இதில் அவர்கள் ஊரில் இருந்து திருச்செந்தூர் அழைத்துச் சென்று, தரிசனம் முடிந்ததும் மீண்டும் அவர்களது ஊருக்கே கொண்டுவந்து அரசுப்பேருந்தில் விடப்படும். இந்தப் பேருந்துகள் வழியில் யாரையும் ஏற்றாது. அதேபோல் தரிசனம் முடியும்வரைக் காத்திருந்து திரும்ப அழைத்துச் செல்வதால் இதற்கு ஒரு பயணிக்கு ஒன்றரைக் கட்டணம் வசூல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து

MahaJun 1, 2023 - 03:37:42 PM | Posted IP 172.7*****

Good decision for temple drip.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory