» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெற்றிக்கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
செவ்வாய் 30, மே 2023 3:47:23 PM (IST)

சென்னை விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். இந்த ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று பகல் 2.30 மணியளவில் குஜராத்திலிருந்து சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பாராட்டு விழாவானது ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
கிரிக்கெட் ஒரு மேனேஜ்மென்ட்மே 30, 2023 - 07:27:57 PM | Posted IP 172.7*****
விளையாடுபவர்கள் எல்லாம் வேற ஊர் காரர்கள், பயித்தியங்கள் எல்லாம் நேரத்தை வீணாகி ரசிக்கும், பிசிசிஐ எல்லாம் பணத்துக்காக விளையாட்டு பிசினஸ்.
MASSமே 30, 2023 - 04:21:21 PM | Posted IP 172.7*****
hi hi hi ha ha ha ...hiii
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











MANITHANமே 31, 2023 - 04:58:41 PM | Posted IP 172.7*****