» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணற்றுக்குள் விழுந்த பாம்பு உயிருடன் மீட்பு!

செவ்வாய் 30, மே 2023 3:25:33 PM (IST)



குளச்சல் அருகே கிணற்றுக்குள் விழுந்த பாம்பு  உயிருடன் மீட்கப்பட்டது. 

குமரி மாவட்டம், குளச்சல் அருகே பத்தறையில் ரிஷியிருப்பு சாஸ்தா கோயில் உள்ளது.இது தனியாருக்கு சொந்தமான கோயில்.தற்போது அங்கு கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது.20 அடி ஆழம் கிணறு தோண்டப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணறு தோண்டுவதற்கு வந்தனர்.அப்போது கிணற்றுக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தவளையை இரைக்காக துரத்தி செல்லும்போது பாம்பு தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கிணற்றுக்குள் பாம்பு விழுந்து கிடந்ததைக்கண்ட தொழிலாளர்கள் வேலையை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர்.பின்னர் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வனச்சரக ஊழியர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இன்று காலை மீண்டும் பத்தறைக்கு வந்த அவர் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார்.பின்னர் பாம்பு குலசேகரம் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory