» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை : தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
சனி 1, ஏப்ரல் 2023 3:00:22 PM (IST)
தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதன் விவரம்: ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூர் ELCOSEZ வளாகத்தில் உலகத்தரத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். ரூ.40 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மேம்படுத்துதல் The Animation, Visual Effects, Gaming and Comic கொள்கை உருவாக்கப்படும்.
ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் (Tamil Nadu DBT Platform) உருவாக்கப்படும். ரூ. 11 கோடியில் தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (AI Mission) உருவாக்கப்படும்.
ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகளை இ-சேவைகள் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். ரூ.184 கோடியில் 20,000 அரசு அலுவலகங்கள் & நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும். ரூ.100 கோடியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT-Hub) 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதல் விவகாரத்தில் இளம்பெண் கொடூர கொலை: நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:53:01 AM (IST)

இரட்டை ரயில் பாதைப்பணி: நெல்லையில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:28:59 AM (IST)

பாஜகவுடனான கூட்டணி முறிவு ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு : இபிஎஸ்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 9:50:33 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:22:10 AM (IST)

சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:19:50 AM (IST)

நடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி: விஜய் வசந்த் எம்.பி இரங்கல்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:33:13 PM (IST)
